இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார்.