பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான ஆர்ப்பாட்டம்
அரசு அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இன்று (17) பதுளை மாவட்ட செயலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாவட்டத்தின் அரசு அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இன்று (17) பதுளை மாவட்ட செயலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட அரசாங்க அதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும் என்றும், கடந்த காலங்களில் அவர் பதுளை மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக இருந்ததையும் குறிப்பிட்டனர். அதனால், அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதித்து, இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களும் அதிபரின் சேவை தொடர்ந்தும் பதுளை மாவட்டத்தில் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.