ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: அரசு மரியாதை நிகழ்வைப் புறக்கணித்தார்களா அமைச்சர்கள்?

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Published on: 24 Feb 2026, 11:59 am
Updated: 5 மாதங்களுக்கு முன்பு
3

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: அரசு மரியாதை நிகழ்வைப் புறக்கணித்தார்களா அமைச்சர்கள்?

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று (24.02.2026) நடைபெற்ற அரசு மரியாதை நிகழ்வில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

வழக்கமாக முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்துவது மரபாக இருந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மாறாக, அரசுத் தரப்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் இரா.பாஸ்கரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதேவேளையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையைப் பாராட்டி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.