டயகமவில் முச்சக்கரவண்டி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: நால்வர் படுகாயம்!
டயகம நகரிலிருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று (22) இரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
நுவரெலியா, டயகம நட்போன் தோட்டப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
டயகம நகரிலிருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று (22) இரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் என மொத்தம் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து டயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.