மலையகத் தொழிலாளர்களை தேயிலைத் தோட்டத்திற்கே சென்று சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சமீபத்தில் அவர்களுக்கான நாளாந்த சம்பளம் 400 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சம்பள உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் பங்கேற்க நுவரெலியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி, நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டமொன்றுக்குச் சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினார். தேயிலை மலைப்பகுதிக்கே சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த சந்திப்பு மலையக மக்களிடையே உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.