இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தேர்வான முதல் மலையகத் தமிழர் - சந்திரபோஸ் சிவகாந்தன்

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு மலையகத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊவா பரணகம, கம்பஹா தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன், இலங்கை விமானப்படையின் கரப்பந்தாட்ட அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிலையில், இப்போது தேசிய அணிக்கும் தேர்வாகியுள்ளார்.

Published on: 23 Jun 2026, 03:16 pm
13

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தேர்வான முதல் மலையகத் தமிழர் - சந்திரபோஸ் சிவகாந்தன்

இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மலையக மண்ணின் மைந்தன், ஊவா பரணகம, கம்பஹா தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இவர் ஏற்கனவே இலங்கை விமானப்படையின் கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

பல சதாப்தங்களுக்குப் பிறகே மலையக மண்ணில் இருந்து, மலையகத் தமிழர் ஒருவர், இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனையானது, மலையகத் தமிழர் சமூகத்தின் விளையாட்டுத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

சந்திரபோஸ் சிவகாந்தனின் இந்தச் சாதனை, எதிர்காலத்தில் மலையக இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக அமையும். சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு சொந்த ஊரிலும், அவர் கற்ற கம்பஹா தமிழ் வித்தியாலயத்திலும் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் பலர் கலந்துகொண்டு அவரைப் பாராட்டினர்.