டிக்கோயா இரட்டைக் கொலை: பதுங்கியிருந்த முக்கிய சந்தேகநபர் சிக்கினார்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Published on: 23 May 2026, 06:30 pm
Updated: 2 மாதங்களுக்கு முன்பு
136

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
டிக்கோயா இரட்டைக் கொலை: பதுங்கியிருந்த முக்கிய சந்தேகநபர் சிக்கினார்

டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 21-ஆம் திகதி இடம்பெற்ற முதியவர் தம்பதியினரின் படுகொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேகநபர், இன்று (23) 4.30 மணியளவில் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். ஹட்டன் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த நாள் முதல் தப்பியோடி, பெற்றசோ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர், பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து பொகவந்தலாவை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டார்.

பதுளையைச் சேர்ந்த இவர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குறித்த பெண்ணின் சகோதரருடைய வீட்டில் தங்கியிருந்த நேரத்திலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.