ஹட்டன் வலயப் பாடசாலை விடுமுறைக்கு மத்தியில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Published on: 15 May 2026, 12:30 pm
112

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஹட்டன் வலயப் பாடசாலை விடுமுறைக்கு மத்தியில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நிலவி வரும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தீர்மானம் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் பயணிக்கும் போது ஏற்படக்கூடிய சிரமங்கள் மற்றும் அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலைகளில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் மற்றும் மேலதிக வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ, நோர்வூட், புளியாவத்தை மற்றும் வட்டவளை பகுதிகளில் நடைபெறவிருந்த தமிழ் தினப் போட்டிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எந்தவொரு காரணத்திற்காகவும் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.