கம்பளையில் மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

கம்பளை போத்தலாப்பிட்டிய பகுதியில் மகாவலி ஆற்றில் இருந்து சுமார் 48 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Published on: 25 Jul 2026, 12:48 pm
4

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
கம்பளையில் மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய, பாத்திமா கார்டன் பகுதியில் அமைந்துள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கம்பளை பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய ஆண் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.