சென்னை மின்சார இரயில் ரத்து: "மத்திய இரயில்வே அமைச்சரின் அலட்சியமே காரணம்" - எம்.பி. மாணிக்கம் தாகூர் காட்டம்

இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரயில்வே சேவை என்பது மத்திய அரசின் நேரடிப் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published on: 24 Feb 2026, 12:02 pm
4

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
சென்னை மின்சார இரயில் ரத்து: "மத்திய இரயில்வே அமைச்சரின் அலட்சியமே காரணம்" - எம்.பி. மாணிக்கம் தாகூர் காட்டம்

சென்னையில் கடந்த ஐந்து நாட்களாகப் புறநகர் மின்சார இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொதுமக்கள் பாதிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரயில்வே சேவை என்பது மத்திய அரசின் நேரடிப் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர் இரயில் ரத்து காரணமாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தினசரிப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளைச் செய்யாதது மற்றும் பொதுமக்களுக்குச் சரியான தகவல் வழங்காதது இரயில்வே துறையின் அலட்சியத்தைக் காட்டுவதாகச் சாடியுள்ளார்.

"தமிழகத்தில் பாஜக எம்.பி.க்கள் இல்லை" என்று விமர்சிப்பதைத் தவிர்த்துவிட்டு, மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், மக்களின் துயரத்தை உடனடியாகத் தீர்க்க ரத்து செய்யப்பட்ட இரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.