கம்பளையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சர்வதேச நாணய நிதி அதிகாரி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் செய்து டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் செய்து டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் இலங்கை வந்தனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வர்.
இந்த சந்திப்புகளில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்புப் பணிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பது முக்கியமாக பரிசீலிக்கப்படுவதுடன், இலங்கை மக்களுக்கு மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க உதவுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.