சென்னையில் நடைபெற்ற போராட்டம்: சீமான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற போராட்டம்: சீமான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்டங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து, காலமுறை ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வந்தார். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சீமான் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை கைது செய்த போலீசார், சீமானையும் கைது செய்தனர். சில மணிநேரங்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சீமான் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர