மக்கள் பிரச்சினைகளில் விஜய் குரல் கொடுக்கவில்லை – நடிகை கஸ்தூரி விமர்சனம்

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் பிரச்சினைகளில் விஜய் குரல் கொடுக்கவில்லை – நடிகை கஸ்தூரி விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தமிழக அரசியல் மற்றும் நடிகர் விஜயை குறிவைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறுவது நடைமுறைக்கு ஏற்ப அல்ல என்றும் விமர்சித்தார்.

சினிமாவை மையமாக வைத்து அரசை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளில் நடிகர் விஜய் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். கேரளாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மட்டும் விஜய் அறிக்கை வெளியிட்டதாகவும், அரசியல் கருத்துக்களில் அவர் அதிகமாக பேசவில்லை என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.

மேலும், அமைதியாக இருந்து அரசியல் வெற்றி பெறும் காலம் எம்.ஜி.ஆர் காலத்துடன் முடிந்து விட்டதாகவும், நடிகை கங்கனா ரனாவத் நடித்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போலவே “ஜனநாயகன்” திரைப்படத்திற்கும் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர