பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் – மூவர் வைத்தியசாலையில்!

தோட்ட முகாமையாளர் திருப்திகரமான பதிலை வழங்க முடியாததால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அது பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் – மூவர் வைத்தியசாலையில்!

மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்கள், தங்களை இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 5ஆம் திகதி முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி காரியாலயத்தில் ஹட்டன் வலய காவல் துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, தோட்ட முகாமையாளர் மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 

எனினும், தோட்ட முகாமையாளர் திருப்திகரமான பதிலை வழங்க முடியாததால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அது பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை 10ஆம் திகதி காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மயக்கநிலைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (11) காலை சுமார் 10 மணியளவில் 1990 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர