ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி: மூவர் படுகாயம்

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) காலை சுமார் 11.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Published on: 12 Mar 2026, 06:11 pm
Updated: 4 மாதங்களுக்கு முன்பு
16

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி: மூவர் படுகாயம்

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) காலை சுமார் 11.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சுமார் 70 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் சாரதி உட்பட மூவர் அதில் பயணித்திருந்தனர். அவர்கள் டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டியை மீட்க முயன்றபோது மேலும் ஒரு ஆபத்தான சம்பவம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் சிக்கியிருந்த வாகனம் திடீரென கீழ்நோக்கி உருண்டு சென்றதாகவும், அப்போது அருகில் நின்றிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த தருணம் அங்கிருந்தவர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாகனம் கீழ்நோக்கி நகர்ந்த அந்த ஆபத்தான தருணம் கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிவேகமாக வாகனம் செலுத்தியதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.