ஆட்சியில் பங்கு விவகாரம்: இறுதி முடிவை தலைமை எடுக்கும் – செல்வப்பெருந்தகை

கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்றும், கூட்டணி உறவு உறுதியாக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Published on: 11 Feb 2026, 07:31 pm
3

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஆட்சியில் பங்கு விவகாரம்: இறுதி முடிவை தலைமை எடுக்கும் – செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு தொடர்பான விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பான இறுதி முடிவை திமுக மற்றும் காங்கிரஸ் தலைமை இணைந்து ஆலோசித்து தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட மற்றும் கட்சியின் நிலைப்பாடு என்றும், தமிழ்நாட்டின் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் செல்வப்பெருந்தகை கூறினார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்துவமான கருத்துகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயல்பானது என்றும், அதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்றும், கூட்டணி உறவு உறுதியாக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு முறை பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தார். கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் சிலர் தவறான தகவல்கள் பரப்புகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.