'NDA கூட்டணியில் ஆட்சிப் பங்கு கேள்வியே இல்லை' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.

Published on: 11 Feb 2026, 07:40 pm
Updated: 5 மாதங்களுக்கு முன்பு
8

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
'NDA கூட்டணியில் ஆட்சிப் பங்கு கேள்வியே இல்லை' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை நகரில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பான விவகாரத்திற்கு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “NDA கூட்டணியில் ஆட்சியில் பங்கு பெறுவது என்ற கேள்வியே இல்லை. கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் அதுபோன்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து, கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பங்கீடு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு பதிலளிப்பதாகக் கருதப்படுகிறது.