வெலிமடையில் போலி இலக்கத் தகட்டுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் கைது: குருநாகலிலும் அதே இலக்கமுடைய வாகனம் மீட்பு
வெலிமடையில் போலிப் பதிவு இலக்கத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே இலக்கமுடைய மற்றுமொரு வாகனம் குருநாகலில் மீட்கப்பட்டுள்ளது.
வாகன அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரொருவரை வெலிமடைப் பொலிஸார் தம்பவின்ன பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின்போது, அதே பதிவு இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிள் குருநாகல் பகுதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டில் இருந்தமை தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிமடைப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Saayam.