நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.