மலையகம் செய்திகள்

ஹட்டன் டிக்கோயா வயோதிப தம்பதி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல் – நகைகள், ஆயுதங்கள் மீட்பு

ஹட்டன் – டிக்கோயா வயோதிப தம்பதி கொலை வழக்கின் சந்தேகநபர் `செல்லையா மனோஜ்' ஜூன் 2 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொள்ளையடிக்கப்பட்ட 18 பவுண் தங்க நகைகள் மற்றும் கொலை ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

டிக்கோயா இரட்டைக் கொலை: பதுங்கியிருந்த முக்கிய சந்தேகநபர் சிக்கினார்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

தொடரும் சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 6 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன. ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் தலா 3 பாடசாலைகள் வீதம் மூடப்பட்டன.

ஹட்டன் டிக்கோயாவில் வயதான தம்பதி படுகொலை – கொள்ளை நோக்கமே காரணமென சந்தேகம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் தனியாக வாழ்ந்த 82 வயதுத் தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொள்ளைக்கு வந்தவர்களே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நுவரெலியாவில் 6 மாதங்களாக கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்: அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடும் மழையால் மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மவுசாக்கலையில் 5 அடி மற்றும் காசல்ரீயில் 15 அடி நீர்மட்ட உயர்வு பதிவாகியுள்ளது.

ஹட்டன் வலயப் பாடசாலை விடுமுறைக்கு மத்தியில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும் கொட்டிய குளவிகள்: 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ கெக்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 5 பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நிலவும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல பகுதிகளில் அடர்ந்த மூடுபனி.. சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. வாகன ஓட்டிகள் அவதானமாக பயணிக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா பேருந்து விபத்து: 22 பேர் காயம், ஒருவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கட்டுப்பாட்டிழப்பே காரணம்

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனியார் பயணிகள் பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

இலங்கையின் பொகவந்தலாவை, பலாங்கொடை வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.